ஜெயலலிதாவின் கடைசி பட ஹீரோ இவருதான்… இசைஞானிக்கு கிடைச்ச வாய்ப்பு.. அறிந்திடாத தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2023, 7:03 pm

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து போனாலும், அவர் செய்த சாதனைகள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார்.

ஒரு நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பல வெற்றி படங்களில் நடித்த சாதித்தவர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்தராமன், ஜெய்சங்கர் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.

இறுதியாக இவர் நடித்த திரைப்படம் நதி தேடி வந்த கடல், ஜெயலலிதா கடைசியாக நடித்து வெளிவந்த “நதியை தேடிவந்த கடல்” என்ற திரைப்படத்தின் நாயகன் சரத்பாபு தான்.

“கீழ்வானம் சிவக்கும்”, “தீர்ப்பு”, “இமைகள்”, “சந்திப்பு”, “சிரஞ்சீவி”, “எழுதாத சட்டங்கள்” என பல வெற்றிப் படங்களில் நடிகர் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த பெருமையும் சரத்பாபுக்கு உண்டு.

நதியை தேடி வந்த கடல் படத்தில் வரும் தவிக்குது தயங்குது பாடல் இன்றளவும் அதிகமாக கேட்கக்கூடிய ஒரு பாடல். முதன்முறையாக ஜெயலலிதாவின் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சரத்பாபு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்தாலும் அவர் நடிப்பால் வெளியான படம் அவரது நினைவலைகளை என்றும் நிலைத்து வைத்திருக்கும்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!