நயன்தாராவுடன் எனக்கு இது தான் பிரச்சனை… சரி செய்ய பார்த்த விக்னேஷ் சிவன் – வேண்டாம்னு விலகி சென்ற திரிஷா!
Author: Shree27 June 2023, 2:13 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்து வந்த ரகசியம் சமூகவலைத்தளங்களில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
முதலில் சிம்வுடன் தான் அவர் நெருக்கமாக பழகி காதலித்து வந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதன் பின்னர் தெலுங்கு ன் நடிகர் ராணாவுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. திரிஷாவுடன் சில ஆண்டுகள் டேட்டிங் செய்துவந்த ராணா அவருடன் நெருக்கமாக பழகிய போட்டோக்களும் இணையத்தில் லீக்கானது. அதன் பின்னர் திரிஷாவை கழட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
அதையெல்லாம் தாண்டி தற்போது திரிஷா மீண்டும் திரைப்படங்களில் நடித்து இரண்டாவது இன்னிங்சில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். திரிஷாவுக்கு போட்டி என்று பார்த்தோமேயானால் அது நயன்தாரா தான். நயன்தாரா பேட்டி ஒன்றில் கூட ” எது என்னமோ தெரியல நான் திரிஷாவிடம் இருந்தும் விலகியே இருக்கிறேன். நாங்கள் சந்தித்துக்கொண்டாலும் பெரிதாக பேசிக்கொள்ளமாட்டேன். ஆனால், ஒருமுறை அவரே வந்து என்னிடம் பேசினார் என கூறியிருந்தார். இதனால் திரிஷா உண்மையில் நல்ல குணம் உள்ளவர். நயன்தாரா தான் திமிர் பிடித்தவர் போல என திரிஷாவின் ரசிகர்கள் நயந்தாராவை விமர்சித்தார்கள்.
இந்நிலையில் திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில், நயன்தாராவுடன் உங்களுக்கு பிரச்சனை, போட்டிகள் இருக்கிறது என செய்திகள் வெளிவருவதெல்லாம் உண்மையா? என ஆங்கர் கேட்டதற்கு, உண்மையில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் நடிக்க வந்ததாலும்… ஒரே காலங்களில் ட்ராவல் செய்து வருவதாலும் இருவரது ரசிகர்கள் அப்படி நினைக்கிறார். இந்த போட்டி படத்தை சார்ந்து மட்டும் ஹெல்த்தியான போட்டியாக இருக்கும் வரை ஓகே. ஆனால் ஒருவரை தாழ்த்தி மற்றொருவர் உயர்த்தி பேசப்படுவதை நான் விரும்ப வில்லை. இருவரும் உயரத்திலே இருப்போம் என்றார்.
பின்னர் காத்துவாக்குல காதல் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்த பின்னர் அது வெளியாகி ஹிட் ஆனதை நினைந்து வருந்தினீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த திரிஷா, “இல்லை” நான் தெளிவாக முடிவெடுத்து தான் வேண்டாம் என நிரராகரிக்கிறேன் பிறகு ஏன் வருத்தப்படணும்? அவசியம் இல்லை என்றார். ஒரு வேலை நான் அந்த படத்தில் நடித்திருந்தால் நயன் உடன் நல்ல நட்பு உண்டாகியிருக்கும் என கூறினார் திரிஷா.