உனக்கு தேவையில்லாத வேலை.. ஒதுங்கிப் போ : நடிகை ராதிகாவை விளாசிய பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 5:28 pm

This is none of your Business என நடிகை ராதிகாவை விளாசிய பிரபல நடிகை

இயக்குநர் பாரதி ராஜா பல நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வடிவுக்கரசி.

சிகப்பு ரோஜாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாரதி ராஜா இயக்கத்தில் முதல் மரியாதை படத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பெயர் பெற்றவர்.

அவர் சமீபத்தில் நடிகர் ராஜேஷ் உடன் யூடியூப் சேனல் ஒன்றில் நேர்காணிலில் ஈடுபட்டார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. விஜயகுமாருக்கு ஜோடி என கூறினர். அன்று ஜூலை 6ஆம் தேதி எனக்கு பிறந்தநாள். மகிழ்ச்சியாக படப்பிடிப்புக்கு வந்தேன், வந்தவுடன் என்னை பார்த்த பாரதி ராஜா இந்த படத்தில் உங்களுக்கு கதாபாத்திரம் இல்லை என முடிவு செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: சிவகார்த்திகேயன் CORRUPT ஆகிட்டாரு.. இனிமேல்தான் அவருக்கு ஆபத்து காத்திருக்கு!

இதைக் கேட்டதும், சட்டென கோபத்தில் வேறு யாரை ஜோடியாக போட்டிருக்கீங்க என கேட்டவுடன், சட்டென் செருப்பை கழட்டி பாரதி ராஜா தன்னைத் தானே, வேற எந்த முண்டச்சியை போட்ட என்ன செருப்பால அடி என அவரே அடித்துள்ளார்.

உடனே படப்பிடிப்பில் இருந்த விஜயகுமார், கண்ணன், இளவரசு என அனைவரும் வந்து வடிவுக்கரசியை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் வடிவுக்கரசிக்கு கோபம் தாங்கவில்லை.

Vadivukkarasi Scold Radhika

நெப்போலியன், ராதிகா என அனைவர் முன்னிலையில் நம்மை கேவலப்படுத்திவிட்டார் என்ற கோபம் இருந்துள்ளது. அப்போது ராதிகா, வடிவுக்கரசியை சமாதானப்படுத்த வந்த போது, ராதிகா This is none of your Business, don’t interfere என கடிந்து கொண்டதாக வடிவுக்கரசியே அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் உடன் இருந்த ராஜேஷ், நீங்க கன்னிப் பருவத்திலேயே படத்திலேயே சண்டை போட்டவங்க என கூறி சிரித்தார். கன்னி பருவத்திலே படத்தில் இருவரும் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply