சூடுபிடிக்கும் “தலைவர் 171″…. ரஜினியின் கதாபாத்திரம் இது தான்!

Author: Shree
31 October 2023, 6:58 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ரஜினி வில்லனாக நடிக்க உள்ளாராம். அவரது ரோல் வெறித்தனமாக இருக்கும் என தகவல்கள் கூறுகிறது. ரஜினி நடிக்க வந்த புதிதில் வில்லனாக தான் நடித்தார். பல படங்களில் முரட்டு வில்லனாக ஹீரோக்களை மிரட்டியெடுத்திருக்கிறார். எனவே தலைவர் 171 படத்தில் ரஜினி தனது வில்லனிசத்தை காட்டப்போவதால் இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1194

    9

    6