தளபதி Fit-ஆ இருக்க இது தான் காரணம்.. – ரகசியத்தை உடைத்த விஜயின் அம்மா..!
Author: Vignesh15 May 2023, 12:15 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தந்தையின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமாகி இன்று “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார்.
விஜய் தனது 10 வயதில் வெற்றி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து ஹீரோவானார். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.

இதையடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக பல ஹிட் படங்களை கொடுத்து மாறினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படம் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சமீபத்தில் விஜய்யின் அம்மா ஷோபா பேட்டி ஒன்றில் கலந்துள்ளார். அதில் தொகுப்பாளர் அவரிடம் விஜய் எப்படி இந்த வயதிலும் ஃபிட்டா இருக்கிறார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த விஜய்யின் அம்மா ஷோபா, “விஜய் தினமும் இரண்டு தோசை காலையிலும் இரவு நேரத்திலும் சாப்பிடுவார். நல்ல ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.