திரையில் பார்க்கும் சூர்யா வேற நிஜத்தில்…? உண்மை முகத்தை கிழித்த பிரபலம்!
Author: Rajesh23 February 2024, 9:32 am
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகா சூர்யாவை போன்றே தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர்கள் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். இந்நிலையில் சூர்யாவை குறித்து பேட்டி ஒன்றில் செய்யாறு பாலுவிடம் கேட்டதற்கு, ” உண்மையில் நாம் திரையில் பார்க்கும் சூர்யா வேறு நிஜத்தில் பார்க்கும் சூர்யா வேறு. திரைப்படங்களில் ஏழை மக்கள் உயரத்தில் இருக்கவேண்டும், நாங்களும் வளரவேண்டும் என சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்களில் பக்கம் பக்கமாக வசனத்தை பேசிவிட்டு வெளிஉலகத்தில் தனது உண்மை முகத்தை காட்டிவிடுகிறார்கள்.
ஆம், சில நாட்களுக்கு முன்னர் கூட, மும்பை ஏர்போர்ட்டில் குடும்பத்துடன் வந்த சூர்யாவை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரை படம்பிடிக்க முயற்சித்தபோது எடுக்காதீர்கள்…! போட்டோ எடுக்காதீர்கள் என்று ஜோதிகா மற்றும் பிள்ளைகளை அப்புறப்படுத்தி பத்திரிகையாளர்களை முறைத்த சூர்யா தான் திரையில் வேறு மாதிரி நடிக்கிறார்.
அப்படித்தான் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு சென்றபோது எல்லோருக்கும் 10 மணிக்கு அனுமதிக்கப்படும் கண்காட்சி சூர்யா குடும்பத்தினருக்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே அனுமதித்தனர். வெளியில் முதியவர்கள், சிறுகுழந்தைகள் வெயிலில் காத்துக்கொண்டிருந்தபோது சூர்யா குடும்பத்தினருக்கு வசதிகளுடன் கண்காட்சி அனுமதிப்பட்டது. இது தான் பிரபலங்களின் உண்மை முகம் என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறினார்.