நான் உருகி உருகி காதலித்த நடிகர் இவருதான்.. கணவர் இறந்த பின் உண்மையை உடைத்த நடிகை மீனா!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2023, 10:01 am

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை தனது கண்களால் உருவாக்கியவர் நடிகை மீனா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஆனால் மீனா தற்போது தான் தன் கணவர் கட்டிய தங்க தாலியை வைத்து பல ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்து வந்தது மட்டும் இல்லாமல் ஒரு தனியார் டிரஸ்ட் ஒன்றினை ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஆனால் வித்யாசாகரை திருமணம் செய்வதற்கு முன்னரே ரித்திக் ரோஷன் அவர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நினைத்ததாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

நடிகை மீனா தன் காதலை ரித்திக் ரோஷனுக்கு சொல்லி திருமணம் செய்யலாம் என்று நினைக்கும்போது தான், ரித்திக் ரோஷனுக்கு கல்யாணம் என்ற செய்தியைக் கேட்டு தன்னுடைய இதயமே நின்று விட்டதாக தன்னுடைய காதல் உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் ரிதிக் ரோஷன் அவர்களை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ