விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி டிஆர்பி உச்சத்தை தொட்டு வருமானத்தை வாரி குவித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 8வது சீசன் விரைவில் துவங்க உள்ளது.
இப்படியான நேரத்தில் கமலஹாசன் திடீரென தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதையடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்த வழக்கப் போகிறார்கள்?என்ற கேள்வி மக்கள் மனதில் பரவலாக எழுத்து வந்தது .
இதை அடுத்து நடிகர் சிம்பு விஜய் சேதுபதி மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டு வந்தது. இதில் நிச்சயமாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க மாட்டார். அவர் இரண்டு நாள் ஏற்கனவே தொகுத்து வழங்கியதற்கே திக்கி திணறிவிட்டார். பின்னர் என்னால் இது வேலைக்கு ஆகாது கமல் சாரை கூப்பிடுங்கள் என்ற சொல்லிவிட்டு அவர் ஓடிவிட்டார்.
அதை அடுத்து சிம்பு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் மக்கள் கவனத்தை ஈர்த்தது. எனவே இந்த நிகழ்ச்சியில் சிம்பு தொகுத்து வழங்க வாய்ப்புள்ளது. விஜய் சேதுபதிக்கு நிச்சயம் சான்ஸே கிடையாது. ஏனென்றால் அவர் தற்போது தொகுத்து வழங்கி வரும் சமையல் நிகழ்ச்சியை பெரிதாக டிஆர்பி பெறவில்லை. இதனால் விஜய் சேதுபதியும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை.
இப்படியான நிலையில் கமல்ஹாசன் ஏன் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்ற கேள்விதான் இப்போது பரவலாக இருந்துள்ளது அதாவது கமலஹாசனுக்கும் விஜய் டிவிக்கும் இடையே ஒரு மோதல் நடந்துள்ளது கமல்ஹாசன் சொல்வதை விஜய் டிவி கேட்பதில்லை விஜய் டிவி சொல்வதை கமலஹாசன் கேட்பதில்லை. அவங்க இஷ்டத்திற்கும் போட்டியாளர்களை இறக்குகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் கடந்த சீசன் பெரிதாக மக்களிடையே ரீச் ஆகவில்லை. மேலும் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் பெரும் தோல்வி அடைந்து விட்டது. இந்த நிலையில் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 6 மாதம் சினிமா பக்கமே தலை காட்டாமல் அமெரிக்காவிற்கு சென்று செட்டிலாக போகிறாராம். “DI” தொழில்நுட்பத்தின் முறையாக பயின்று கற்று தெரிந்து வரப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.