விஜயகாந்துக்கு கால் பிடிச்சிவிட்டவன் வடிவேலு…. அவர் காலையே வாரினா சும்மா இருப்பாரா? மரண அடி சம்பவம்!
Author: Shree21 July 2023, 11:11 am
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடியன் என்ற இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகர் வடிவேலு. அடுத்தடுத்த படம், உச்ச நடிகர்களுடன் வாய்ப்பு , மளமளவென உயர்ந்த சம்பளம் இது எல்லாம் தலைக்கணமாகிவிட்டது. அதன் பின்னர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு போகாமல் டகால் அடிப்பது, பணத்தை வாங்கிவிட்டு ஒரு பேச்சு பேசுவது, தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என திமிர் காட்டுவது என இருந்து வந்தார்.
இதனால் வடிவேலுவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் சில ஆண்டுகள் சினிமாவி விட்டு ஒதுங்கியே இருந்தார். மேலும் தன்னுடன் நடிகர் நடிகர்களை வளரவிடாமல் கொடுமைப்படுத்தியதாக பலர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். அப்படித்தான் தற்ப்போது நடிகர் தியாகு வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதாவது, சினிமாவில் சில பேர் காசு கையில் வந்தால் தன்னலம் தெரியாமல் நடந்து கொள்வார்கள்.
ஆம், நான் விஜயகாந்த் – வடிவேலுவின் சண்டை விவகாரம் குறித்து தான் பேசுகிறேன். விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர் படத்தில் குடை பிடித்துவிட்டு ரூ. 250 சம்பளத்துக்கு வேலை பார்த்த வடிவேலுக்கு அவர் வீட்டுக்கு எதிரிலே போட்டியாக வீடு வாங்கினாராம். விஜயகாந்திற்கு கால் அமுக்கிவிட்டு அவரையே கால் வாரிவிட்டவர் தான் வடிவேலு ஏன் அவர் கூறியுள்ளார்.
ஒரு முறை அங்கு ஒரு இறப்பு நேரிட, அஞ்சலி செலுத்தவந்த உறவினர்களை என் வீட்டு எதிரில் எதுக்கு வண்டி நிறுத்துற எடு எடு என அராஜகம் செய்து விஜயகாந்த் ஆளிடம் தர்ம அடி வாங்கினாராம். பின்னர் வடிவேலு தியாகுவுக்கு போன் செய்து உதவிகேட்டாராம். அவர் உடனே கலைஞர் கருணாநிதிக்கு கால் செய்து பேசி
பின்னர் நாஞ்சில் குமரன் என்கிற கமிஷ்னரிடம் கூறி வடிவேலுவை காப்பாற்றினேன் என நடிகர் தியாகு கூறியுள்ளார். எனவே சினிமாவில் வளர்வதற்கு முன்னர் பலருக்கு எடுபிடிவேலை செய்த வடிவேலு கொஞ்சம் வளர்ந்து பணம் பார்த்ததும் அவர்களையெல்லாம் பழிவாங்கினார் என அவர் கூறியுள்ளார்.