சீரியலில் ரொம்ப மோசம்… சினிமாவில் கொஞ்சம் பரவாயில்ல – வாணி போஜன் OPEN TALK!

Author: Rajesh
25 January 2024, 5:22 pm

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

vani bhojan-updatenews360

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் சீரியலுக்கும் சினிமாவிற்கும் உள்ள வித்யாசம் குறித்து, சீரியல் என்றால் ஷூட்டிங் ஷூட்டிங் என்றே வாழ்க்கை போய்விடும். நமக்கான நேரமே இருக்காது. ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி…. அடுத்த காட்சி என்று நடித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

vani bhojan-updatenews360

சீரியலில் நடித்தபோது தொடர்ந்து ஐந்து வருடம் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கூட ஒரு இடத்தில் அமர்ந்து என்னை பற்றியோ, என் வாழ்க்கை பற்றியோ, யோசிக்க நேரம் இருந்தது கிடையாது. ஆனால், சினிமாவை பொறுத்தவரை அப்படி கிடையாது. ஷூட்டிங் முடிந்ததும் நிற கேப் இருக்கும். ரிலாக்ஸ் ஆக இருக்கலாம். வேலை பிரஷர் இருக்காது எனவே சினிமாவில் நடிப்பதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கவேணும் என எமோஷ்னல் ஆக பேசினார்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 347

    0

    0