பிச்சைக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல ஹீரோ இவர்தான்!

Author: Shree
27 November 2023, 7:24 pm

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.

தமிழில் 2016ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தமிழ் சினிமா மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் அம்மா செண்டிமெண்ட் காட்சி பார்த்து தியேட்டரில் அழாதவர்கள் யாருமே இலை. குறிப்பாக விஜய் ஆண்டனியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. என்னவென்றால் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு பதிலாக முதலில் நடிக்க ஹீரோ சித்தார்த் தானாம். முதலில் பிச்சைக்காரன் கதையை சித்தார்த்திடம் கூறியபோது அவர் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். காரணம் இயக்குனர் அப்போது கூறிய கதை வேறு. அதன்பின் அந்த கதையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்து விஜய் ஆண்டனியிடம் கதையை கூறியுள்ளார். அதன் பின்னர் விஜய் ஆண்டனி நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததை நினைத்து ” மிஸ் பண்ணிவிட்டேன்” என்று சித்தார்த் வருத்தப்பட்டாராம்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!