விஜய் அடம்பிடிக்கும் ஒரே விஷயம் இது தான் – SAC பேட்டி வைரல்!

Author:
28 October 2024, 5:55 pm

அப்போது தொகுப்பாளர் விஜய் உங்களிடம் அடம் பிடித்து ஏதேனும் விஷயத்தை கேட்டிருக்கிறாரா என கேள்வி எழுப்ப… ஆம்… அவர் ஒரே ஒரு விஷயத்துக்கு தான் ரொம்ப ஆடம் பிடிப்பாரு. சின்ன வயசுல இருந்தே அவர் அதற்காக அடம்பிடித்திருக்கிறார் .

TVK

விஜய் நேற்று மாநாட்டில் உணர்ச்சி பொங்க பேசி தனது அரசியல் பணத்தையும் கொள்கைகளையும் அறிவித்து தமிழக மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்த பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதாவது எந்த ஒரு கார் புதுசா மார்க்கெட்ல லாஞ்ச் ஆனாலும் அந்த கார் உடனடியாக அவருக்கு வாங்கி கொடுத்திடனும். அதை அவர் காலேஜ்ல இருந்தே பண்ணிட்டு வர்றாரு. அதுமட்டுமில்லாமல் சென்னை புதிய கார் ஒன்று மார்க்கெட்டில் லாஞ்ச் ஆகுது என்றால் இரண்டாவது நபராக வாங்கும் ஆள் நான்தான் .

vijay-car-1

முதல் நபராக ராமச்சந்திரா ஓனர் உடையார் புதிய காரை வாங்குவார். அதற்கடுத்து நபராக நான் வாங்குவேன் விஜய்க்காக என கூறியிருந்தார். மேலும் விஜய்யின் தந்தை விஜய்யை கார் ஓட்ட அனுமதிக்கவே மாட்டாராம்.

ஒரு டிரைவர் வைத்துக்கொண்டு தான் ஓட்ட வேண்டும் என கூறுவாராம். காரணம் பாதுகாப்பிற்காக தன் மகனை கார் ஓட்ட வேண்டாம் எனக் கூறுவாராம். ஆனால் விஜய்யோ கொஞ்ச தூரம் சென்றதும் நானே ஓட்டுறேன் நீ பக்கத்து சீட்டில் உட்கார்ந்துக்கோ என சொல்லிவிட்டு கார் ஓட்ட ஆரம்பித்து விடுவாராம்.

vijay

இப்படி விஜய் அடம்பிடிக்கும் ஒரு விஷயம் புதிய கார்களை ரக ரகமான கார்களை வாங்கி ஓட்ட வேண்டும் என ஆசைப்படுவது தான் என எஸ் எஸ் கூறியிருக்கிறார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 127

    0

    0