தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.
முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மகள் அனுஷ்கா டென்னிஸிலும் ஆத்விக் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்கள். அவ்வப்போது அவர்கள் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இதனிடையே அஜித் தன் மகள் அனுஷ்காவின் பிறந்தநாளை அண்மையில் துபாயில் குடும்பத்தினரோடு கொண்டாடினார். அங்கு சொகுசு Boat ஒன்றில் அஜித் தனது குடும்பத்தினரோடு செல்ல அவரின் ரசிகர்கள் அடையாளம் கண்டுபிடித்து தல தல என்று கத்தி கூச்சலிட்டனர்.
உடனே அஜித் அவர்களுக்கு கையசைத்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியது. மேலும், அஜித் பார்ட்டியில் வெளிநாட்டு ரசிகையுடன் ஆடிய நடன வீடியோவும் இணையத்தில் வைரலாகியது. அதையடுத்து ஷாலினி தனது மகள் அனுஷ்காவின் பிறந்தநாளில் கேக் வெட்டி மகன் ஊட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ” ஹேப்பி பர்த்டே மை பேபி” என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளினார்.
பின்னர் துபாயில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய போது ரசிகரின் எல்லைமீறிய செயலால் கடுப்பான அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது. ஆம் அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு அவரின் குடும்ப கொண்டாட்டத்தை வீடியோ எடுத்த ரசிகரின் போனை பிடிங்கி அந்த வீடியோக்களை டெலீட் செய்தார் அஜித் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் அன்று அஜித் ஏன் அப்படி நடந்துக்கொண்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தன் மகளை திருட்டு தனமாக வீடியோ எடுத்துள்ளதை அறிந்து ஒரு தந்தையாக அஜித் மிகுந்த கோபம் அடைந்து தான் அவரிடம் இருந்து செல்போனை பிடிங்கி அந்த வீடியோவை டெலீட் செய்தாராம். ஆனால், அஜித் மோசமானவர் என்று தவறாக செய்தி பரப்பிவிட்டார்கள்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.