தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.
முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி திருமணத்திற்கு பின்னர் முழுமையாக நடிப்பை மூட்டைகட்டிவிட்டார். அதற்கான காரணமே அஜித் தானாம். நீ நடிக்க வேண்டாம். உனக்கு தேவையான எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.
என் சினிமா தொழில் சரிந்துவிட்டாலும் வேறு ஏதேனும் பிசினஸ் செய்து உன்னை உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன். எனவே நீ சினிமாவில் நடிக்கவேண்டாம். நாம் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்வோம். குடும்பம் தான் முக்கியம் என எடுத்து கூற ஷாலினிக்கு அஜித் மீதிருந்த அலாதி பிரியத்தினால் அவர் சொல்படி கேட்டு நடந்துக்கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு ஷாலினி பிரசன்னாவுக்கு ஜோடியாக ’பிரியாத வரம் வேண்டும்’ என்ற படத்தில் அஜித் அனுமதியோடு நடித்தார். அது தான் அவரது கடைசி திரைப்படம்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.