நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக்கொண்டார். அசோக் செல்வன் திருமணம் செய்துக்கொண்டதை அவரது தீவிர பெண் ரசிகைகளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சில இளம் பெண்கள் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனை மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள். எங்ககிட்ட இல்லாதது அவகிட்ட அப்படி என்ன இருக்கு? அவளுக்கு நிக்க கூட நாதி இல்லை. அந்த உடம்புல ஒன்னுமே இல்லை. அத வச்சி என்ன பண்றது என மிகவும் மோசமாக பாடி shaming செய்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதற்கு சில ஆண்கள் அவங்க கிட்ட ரூ. 250 கோடி சொத்து இருக்கு உங்கிட்ட இருக்கா? ஏன் கேவலமா பொறாமை பிடித்து அலையுறீங்க என திட்டி தீர்த்துள்ளனர். இதனால் அசோக் செல்வன் மிகுந்த மன வருத்தத்தில் மனைவியை எப்படி சமாதானம் செய்வது என குழப்பத்தில் இருக்கிறார்.
இப்படியான நேரத்தில் இந்த கிண்டல் கேலிக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் அசோக் செல்வன் பேட்டியில் தனக்கு எப்படிப்பட்ட பெண் பிடிக்கும் என்ற கேள்விக்கு, ” இங்க தான் சாப்பிடுவேன். லக்ஸரி வாழ்க்கை தான் வாழ்வேன். இங்க தான் இருப்பேன் இப்படி எல்லாம் சொல்லி சீன் போடாமல் ரொம்ப சாதாரணமா நார்மலான வாழ்க்கை வாழும் மனோபாவம் கொண்ட பெண் தான் பிடிக்கும் அதுபோன்ற பெண் தான் மனைவியாக வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக அன்றே கணித்தார் அசோக் செல்வன் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.