உயரமா இருக்கும் நடிகர்கள் தான் வேணும் – சினிமா வாழ்க்கையை சீரழித்துக்கொண்ட நமீதா!
Author: Rajesh20 February 2024, 8:22 pm
கவர்ச்சி நடிகையான நமீதா தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார்.
ஆம், நடிகை நமீதாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோவிலே கட்டி உள்ளார். தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை நமீதாவின் சினிமா மார்க்கெட் எப்படி பறிபோனது என்பது குறித்த விஷயம் கசிந்துள்ளது. அதாவது நமீதா நடிக்க வந்த புதிதில் தனது உயரத்திற்கு தகுந்தாற்போன்று உயரமான நடிகர்களுடன் தான் நடிப்பேன் என கூறி சத்யராஜ் , அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தார். அதையும் தாண்டி மக்களிடையே சீக்கிரம் இடம்பிடிக்கவேணும் என எல்லைமீறி கவர்ச்சி சீன்களில் நடித்து முகம் சுளிக்கவைத்தார். அது ஒருகட்டத்தில் அவருக்கு வயசு ஆக ஆக அவரது கவர்ச்சிக்கு ரசனையில்லாமல் போய்விட்டது. இது இரண்டும் தான் நமீதாவின் கெரியர் காலி ஆனதற்கு காரணமாம்.