விநோத நோயால் அவதிப்படும் ரக்ஷிதா… இதனால் தான் கணவரோடு சேர மறுக்கிறாராம்..?

Author: Rajesh
27 December 2023, 5:23 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

rakshitha

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அது உண்மையில்லை கட்டுக்கதை என்பது விசாரணையில் தெரியவந்தது. தினேஷிடம் இருந்து விவாகரத்து வாங்க நாடகம் ஆடியதாக செய்திகள் வெளியானது.

தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் ரக்ஷிதா அவரை ஏற்றுக்கொள்வதாகவே தெரியவில்லை. இந்நிலையில் ரக்ஷிதா தினேஷுடன் சேர்ந்து வாழததற்கு காரணம் இது தான் என கூறி பயில்வான் றன் ரங்கநாதன் ஒரு பெரிய குண்டு தூக்கி போட்டுள்ளார். அதாவது, ரக்ஷிதாவுக்கு ஒரு விதமான மனநோய் இருக்கிறதாம். இது எப்படி ஆரம்பித்தது என்றால்.

bayilvan-ranganathan

அவர் சாப்பிடாமலே தானாக உடல் எடை அதிகரிக்குமாம். சாப்பிட்டால் அது இன்னும் டபுள் மடங்காக உடல் எடை கூடி விடுகிறதாம். இதனால் அவர் நிறைய டயட், food following செய்வதில் முழு நேர கவனம் செலுத்தி வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம். இதன் காரணமாக தினேஷுடன் சேர்ந்து வாழ மறுப்பதாக பயில்வான் புதிய கதை ஒன்றை கட்டியுள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 510

    0

    0