சந்திரமுகியாக சாய் பல்லவியா? படம் எதிர்பார்ப்பதை விட சூப்பரா இருந்திருக்குமே – ரசிகர்கள் வருத்தம்!

Author: Shree
4 September 2023, 2:57 pm

தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் படங்களுக்கே தலைவர் ” சந்திரமுகி’ படம் தான். 2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மரணபீதியிலும் மகழ்ச்சி அடையவைத்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனையை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

அதிக பொருட்செலவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளிடையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் சந்திரமுகியாக முதலில் சாய்பல்லவி தான் கமிட் செய்யப்பட்டாராம். கதையை கேட்டவுடன் ஓகே சொன்ன சாய்பல்லவி அதன் பின்னர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சில மாற்றங்களை செய்யச்சொன்னாராம். இதனால் கடுப்பான பி. வாசு அதெல்லாம் செய்ய முடியாது என கூற சாய்பல்லவி அந்த படத்தில் விலகிவிட்டாராம். அதன் பின்னர் காஜல் அகர்வாலிடம் கேட்க அவரும் நோ சொல்லிவிட்டாராம். அதற்கடுத்து நடிகை கங்கனா ரனாவத்திடம் பேசி ஓகே செய்தார்களாம். சாய்பல்லவி சிறந்த டான்சர் என்பதால் அவர் சந்திரமுகியாக நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!