தீராத காதல்… லிப்லாக் காட்சி – நடுரோட்டில் சிம்ரனை தவிக்கவிட்டு சென்ற காதலன்!

Author: Shree
16 November 2023, 8:44 pm

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

simran

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை சிம்ரன் சினிமாவில் பீக்கில் இருந்தபோது நடன கலைஞர் ராஜு சுந்தரத்தை தீவிரமாக காதலித்து வந்தார். அப்போது சிம்ரன் மீது அதிக அளவில் போசசீவ் கொண்டிருப்பாராம்.

ஆம், சிம்ரன் திரைப்படங்களில் நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ரொமன்ஸ் காட்சிகளில் நடித்தாராம். அப்படித்தான் ஒரு முறை கமலுடன் லிப்லாக் காட்சியில் நடித்ததால் சிம்ரனை நடுரோட்டில் நிற்கவைத்து ராஜு சுந்திரம் கடுமையாக சண்டையிட்டு வாக்குவாதம் செய்தாராம். அந்த சமயம் சிம்ரன் கமல் ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் சிம்ரன் ராஜு சுந்திரம் உடனான காதலை முறித்துக்கொண்டாராம்.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 388

    0

    0