உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை ஸ்ரீவித்யா உடன் நெருங்கி பழகி வந்தார் . கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ” சொல்லத்தான் நினைக்கிறேன்”. அதன் பின்னர் செல்லுலாய்டில் பூத்த களாசிக் காதல், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து ரகசிய உறவில் நெருக்கமாக பழகி வந்தார்கள். இருந்தாலும் கமல் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான், ” அவள் இறந்தாலும் இறவா நட்பு” என்றெல்லாம் கூறியுள்ளார்.
இதனிடையே ஸ்ரீவித்யா கடந்த 2006 -ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் உயிர் பிரியும் நேரத்தில் தன்னை சந்திக்க நினைத்த யாரையும் பார்க்க விரும்பவில்லை என கூறி மறுத்த அவர் கமலை மட்டும் தான் இறப்பதற்குள் ஒரு முறையாவது பார்த்துவிடவேண்டும் என ஏங்கினாராம். விஷயமறிந்து ஸ்ரீவித்யாவை பார்க்க சென்ற கமல் கட்டிப்பிடித்து கதறி அழுதாராம்.
அவர்களின் உறவு அவ்வளவு புனிதமானதாக இருந்ததாம். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தொகுப்பாளினி டிடி கமல் ஹாசனிடம் ஸ்ரீ வித்யா உடனான காதல் குறித்து கேட்டதற்கு, சற்றும் தயங்காமல் பதில் அளித்த கமல், ‘ஸ்ரீ வித்யா என்னுடைய அன்பு காதலி. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை’ என கூறினார். ஸ்ரீ வித்யா – கமல் ஹாசனின் காதலை ஸ்ரீ வித்யாவின் தாய் ஏற்க மறுத்ததால் இந்த காதல் முறிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஸ்ரீ வித்யாவின் தாய் இந்த காதலுக்கு ஏன் மறுப்பு தெரிவித்தார்கள் என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, என் மகள் ஸ்ரீ வித்யாவுக்கு 21 வயது, ஆனால், கமல்ஹாசனுக்கு 20 தான் ஆகிறது.இருவரும் சினிமாவில் இப்போது தான் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள், அதனால் இந்த நேரத்தில் திருமணம் செய்தால் சரியாக இருக்காது என்று தான் மறுத்துவிட்டாராம்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.