அழகா தெரியணும்னு ஆசைப்பட்டு ரஜினி செய்த செயல் – வாழ்நாள் முழுக்க வருந்தும் சூப்பர் ஸ்டார்!

Author: Rajesh
23 January 2024, 6:18 pm

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் இப்போது நன்றியுடன் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்களின் வாழ்த்தும் கடவுளின் அருளும் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் சந்தோஷமாக கூறி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் தலைமுடி பறிபோன ரகசியம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, அதாவது ரஜினிகாந்த் தனக்கிருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து எப்போதும் அவர்கள் முன் நாம் இதே போன்று இளமையாக, ஸ்டைலாக இருக்கவேண்டும் என நினைப்பாராம்.

அதனால் தனது தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையாக மாறியதை பார்த்து அடிக்கடி ஹேர் டை அடிக்க துவங்கினாராம். அதுவும் பல விதமான பிராண்டுகளில் கண்ட டை உபயோகித்ததனால் கெமிக்கல் தலையின் வேர்ப்பகுதியில் ஊடுருவி மளமளவென முடி கொட்டிப்போச்சாம். இதனை ரஜினியே பேட்டி ஒன்றில் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?