கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண்.
கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் ராஜ்கிரண் அஜித் குறித்து இதுவரை யாருக்கு தெரியாத விஷயம் ஒன்று கசிந்துள்ளது. அதாவது அஜித் வெகு சிலருடன் மட்டுமே மிகவும் நெருங்கி பழகுவார். அவர்களுடன் அரட்டை அடிப்பது, ட்ரிப் செல்வது என நண்பர்கள் பழகுவது போன்றே பழகுவாராம். அந்த லிஸ்டில் இருந்தவர் தான் நடிகர் ராஜ்கிரண்.
ராஜ்கிரணின் குணத்தை பார்த்து அவருடன் நெருங்கி பழகிய அஜித் ஒரு கட்டத்தில் அப்பாவை போன்றே பார்த்துக்கொண்டாராம். திடீரென்று ராஜ்கிரணை பார்க்க வேண்டும் என்று தோன்றினால், அஜித் நேராக ராஜ்கிரண் இருக்கும் படப்பிடிப்பிற்கே சென்று விடுவார். அப்படித்தான் அவர்களது உறவு சென்று கொண்டிருந்தது. அது போன்ற சமயத்தில் தான் ராஜ் கிரண் அஜித்திடம் ஒரு உதவி கேட்டுள்ளார். அதாவது ராஜ்கிரண் திரைப்படங்கள் எடுத்து கடனாளியாகி லட்ச கணக்கில் வட்டி கட்டிக்கொண்டிருந்தாராம்.
அந்த சமயத்தில் தன்னுடன் நெருங்கி பழகும் டாப் ஹீரோவான அஜித்தை வைத்து ஒரு படம் எடுத்து எல்லா கடனையும் அடைந்துவிடலாம் என எண்ணி அவரிடம் வெளிப்படையாகவே கேட்டுள்ளார் ராஜ்கிரண். அவ்வளவு தான் அன்றில் இருந்து அஜித் ராஜ் கிரண் உடனான உறவையே முறித்துக்கொண்டார். அஜித்தை பொறுத்தவரை தன்னுடன் நெருக்கமாக பழகுபவர் தன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என நினைப்பார் அதனால் ராஜ்கிரண் உறவு முறிந்துவிட்டது என அந்தகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.