நான் விஜய் அளவிற்கு திறமைசாலி இல்லை… லியோ படத்தில் நடிக்க மறுத்தது குறித்து விஷால் வெளிப்படை!
Author: Shree5 September 2023, 12:52 pm
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.

பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைபடத்தில் முதலில் நடிக்க இருந்தது விஷால் தானாம். லோகேஷ் அவரிடம் கதை சொல்லியபோது அவர் நடிக்க முடியாது என கூறி மறுத்ததாக செய்திகள் வெளியானது. இது குறித்து பேசியுள்ள நடிகர் விஷால், ஆம், அது உண்மை தான். லோகேஷ் என்கிட்ட லியோ படத்தின் கதை சொன்னதும் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு.
ஆனால், அவர் 4 மாசம் கால்ஷீட் கேட்டிருந்தார். அந்த சமயத்தில் நான் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். எனவே ஒரே நேரத்தில் என்னால் இரண்டு படங்களில் நடிக முடியாது நான் அவ்வளவு பெரிய திறமைசாலி இல்லை என கூறி அப்படத்தை நிராகரித்துவிட்டேன் என விஷால் கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் தேடி வந்த நல்ல சான்சை இப்படி வீணடித்துவிட்டார் விஷால் என கூறி வருகிறார்கள்.