மனைவியை விவாகரத்து செய்த பிறகு நடிகர் ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது. மேலும், அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதாக அப்போது செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் மும்பையில் செட்டிலானது உண்மையா? அதற்கான காரணம் என்ன? என சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் கேள்வி எழுப்பியதற்கு பாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு முன்னரே வந்தது .
ஆனால், எனக்கு வந்த எல்லா கதையுமே டபுள் ஹீரோ சப்ஜெக்டாக தான் இருந்தது. அதில் என்னுடைய கதாபாத்திரம் பிடிக்கவில்லை. அதனால் நான் அதில் நடிக்காமல் தவிர்த்து விட்டேன். முக்கியமாக தமிழில் நாம் நல்ல நிலையில் தான் இருக்கிறோம். பிறகு ஏன் பாலிவுட்டில் செல்ல வேண்டும்? என்ற ஒரு எண்ணம் எனக்கு வந்த வந்தது.
மேலும் இரண்டாவது ஹீரோவாக நடிக்க வேண்டுமா? என்று நான் ரொம்ப யோசித்து நான் வேண்டாம் அப்படின்னு சொல்லிவிட்டேன். இந்த நேரத்தில் எனக்கு நல்ல திரைப்படங்கள் வாய்ப்பு வருகிறது. எனவே பாலிவுட்டில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்.
அதற்காக தமிழ் படங்களை முழுவதுமாக விட்டு விட்டு போகிறேன் என்று அர்த்தம் இல்லை. பாலிவுடில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடிக்கிறேன். அவ்வளவுதான் தமிழ் படங்களுடன் சேர்த்து இந்தியிலும் நடிக்க முடிவு செய்துவிட்டேன். அதற்கான முயற்சிகள் தான் இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இதையும் படியுங்கள்:
அங்கே வேலை செய்ய வேண்டுமென்றால் அங்கே செட்டிலாகி அங்கே தங்கி இருந்தால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். அதனால் தான் மும்பையில் சென்று செட்டில் ஆகி இருக்கிறேன். என்னுடைய விவாகரத்துக்கும் நான் மும்பையில் செட்டில் ஆனதிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்த பேட்டியின் மூலம் ஜெயம் ரவி உறுதியாக கூறினார்.