விஜய் மனைவியை பிரிய இது தான் காரணம் – வெட்டவெளிச்சத்துக்கு வந்த ரகசியம்!

Author: Rajesh
22 January 2024, 11:04 am

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 67 படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும். அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது.

vijay sangeetha

இந்நிலையில் விஜய் தன் மனைவி சங்கீதாவை பிரிய முக்கிய காரணமே விஜய்யின் அரசியல் பிரவேசம் தானாம். ஆம் இது குறித்து கூறியுள்ள பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், விஜய் அரசியலில் வருவது அவரது மனைவிக்கும் மகன் சஞ்சய்க்கும் சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். காரணம் இதுவரை நாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் அரசியலிலே போய்விடும்.

jason sanjay

அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத சர்ச்சை, பிரச்சனைகள் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதால் வேண்டாம் என இருவரும் மறுத்தார்களாம். ஆனால், அவர்களை உதறிவிட்டு விஜய் அரசியலில் இறங்கிவிட்டார். இதனால் தான் மனைவி சங்கீதா பிரிந்தார் என அவர் கூறியுள்ளார். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 370

    0

    0