தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன் . 90ஸ் காலகட்டங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வந்த இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பெரும் புகழ்பெற்றார்.
குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து, சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது. சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த நடிகர் நெப்போலியன் தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடும்பத்தோடு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அங்கு 100 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து சொந்தமாக தொழில் நடத்தியும் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதனிடையே தன்னுடைய மகன் தனுசுக்கு நடிகர் நேப்போலியன் திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்ததில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். ஆம் அவரது மகன் தனுஷ் 4 வயதாக இருக்கும் போதே “Muscular dystrophy” என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீல் சாரில் அமர்ந்தபடியே இருக்கிறார்.
இப்படியான மகனுக்கு நடிகர் நெப்போலியன் திருமணம் செய்து வைத்து பார்க்க ஆசைப்பட்டு திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஒருவரை தனது மகனுக்கு மணமுடித்து வைத்திருக்கிறார். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் திருநெல்வேலி பெண்ணை மருமகள் ஆக்க காரணமே இதுதான் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஆம், நெப்போலியன் தன்னுடைய மகனின் நிச்சயதார்த்த விழாவில் தான் எதற்காக தமிழ்நாட்டுப் பெண்ணை மருமகள் ஆக்கப் போகிறேன் என்று பேசி இருந்தார். அதாவது, ” நான் கடல் கடந்து வாழ்ந்தாலும் என்றும் தமிழை மறக்காதவன். தமிழ் கலாச்சாரத்தை நான் மறக்காதவன். என் மகன்களையும் தமிழ் கலாச்சாரத்தோடு தான் வளர்த்து வருகிறேன் .
நான் எந்த தேசத்தில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தில் என் மருமகள் தமிழ்நாட்டு பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எனக்கு பணம் காசு அவசியம் கிடையாது. என்னுடைய மருமகள் என்னுடைய அடுத்த வாரிசு…. அதனால் நான் தமிழ்நாட்டு பெண்ணையே என்னுடைய மருமகள் ஆக்கிக் கொண்டேன் என வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதை அடுத்து அவர் தமிழ் மீது வைத்திருக்கும் பற்று எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.
0
0