இது தான் விஷயம்…. இதனால் தான் திருமணமே பண்ணல… 43 வயதில் உண்மை ஒப்புக்கொண்ட மும்தாஜ்!

Author: Shree
12 October 2023, 4:18 pm

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டார் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.

போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் அதிலும் விஜய்யுடன் குஷி திரைப்படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்தப்பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே, நடிகை மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில் 42 வயதாகும் மும்தாஜ் இன்னும் திருமணமே செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்டதற்கு, “எனக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம். எனக்கு திருமணம் செய்துக்கொள்ளும் யோசனையே இல்லாமல் இருப்பது தான். எத்தனையோ ப்ரபோசல்கள் வந்துள்ளது. ஆனாலும் எனக்கு திருமணம் குறித்த எண்ணமே வரவில்லை. அதனால் தான் இப்படியே இருக்கிறேன் என அவர் கூறினார். இதனை கேட்ட நெட்டிசன்ஸ் ஏன்மா…. இதெல்லாம் ஒரு காரணமா? என அவரை ட்ரோல் செய்துள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 429

    0

    0