விஜய்யை பாதாள குழியில் தள்ள பார்த்த எஸ்ஏசி – அப்பாவை வெறுக்க காரணம் இது தான்!

Author: Shree
6 April 2023, 9:40 am

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தந்தை எஸ்ஏசியின் உதவியால் விஜய் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது.

அவரது உதவி இருந்ததால் தான் இன்று இந்த உயரத்திற்கு வர முடிந்தது. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு விஜய் பெற்ற தந்தை என்று கூட பார்க்காமல் அவருடன் ஜென்ம விரோதியாக இருந்து வருவது பல மேடைகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. இது அவரது தந்தை எஸ்ஏசிக்கு மட்டும்மல்லாமல் ரசிகர்களையும் வருத்தமடைய செய்தது.

இது குறித்து பேட்டி ஒன்றில் எஸ்ஏசி, “நானும் விஜய்யும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒருகட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களுடைய ஆட்டிட்யூட் மாறிவிடும். இது அனைவரது வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படிதான் ஓர் தந்தையாக நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை” என்றார்.

அப்படிதான், நண்பன் படத்திற்கு முன் விஜய் முதல்வன் படத்தில் நடிக்கவிருந்தது. ஆனால் அது நடக்காமல் போனதற்கு காரணம் எஸ்ஏசி தான் என இயக்குனர் ஷங்கர் வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது, விஜய்யிடம் கால்ஷீட் கேட்க என் தரப்பில் இருந்து அசோசியேட் எஸ் ஏ சந்திரசேகரிடம் பேசியிருந்தார். அந்த உரையாடலில் இருவருக்கும் இடையில் ஏதோ ஒன்று சரியா அமையாமல் போனது. இதனால் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியவில்லை.

அதன்பின் எஸ் ஏ சி என்னிடம் வந்து, நாமலே பேசியிருக்கலாம். என் மகனுக்கு அமையவிருந்த மிகப்பெரிய வெற்றிடம் என்னால் கெட்டுப்போனது என்றாராம். பின்னர் ஷங்கர் பரவாயில்லை சார் இன்னொரு படம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம். இப்படித்தான் விஜய் விஷயங்களில் தலையிட்டு கெடுத்து வந்துள்ளார் எஸ்ஏசி. அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும் தொடர்ந்து இதுபோல் நடந்துக்கொள்வது விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அவரால் தன் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணி ஒரு கட்டத்தில் அவரை விட்டு ஒதுங்கியுள்ளார் விஜய்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 551

    0

    1