அந்த பொம்பளையா? உங்ககிட்ட இத எதிர்பார்க்கல – ஏஆர் ரஹ்மான் FUN SPEECH!
Author: Shree21 July 2023, 8:42 am
சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.
சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.
அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு மேடையில் பேச ஏஆர் ரஹ்மானை அழைத்த ஆங்கர் இந்தியில் பேசிய காரணத்தால் ரஹ்மான் அந்த மேடையை விட்டு இறங்கி வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது. இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் AV வெளியிட்டு கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஏஆர். ரஹ்மான், படம் இந்தி படம், தமிழில் கஷ்டப்பட்டு டப் செய்து எடுத்திருந்தோம். எனவே அது தமிழ் படமென்று அந்த நேரத்தில் எல்லோரும் நம்பனும். கரெக்ட்டா அந்த பொம்பள இந்தியில் பேசுறாங்க அதனால் தான் நான் மேடையில் இருந்து இறங்கி வந்திட்டேன். நான் லிப்ட்ல போகும்போதே இந்தியில் பேசாதம்மா …. தமிழில் பேசுன்னு சொன்னேன்.
எனக்கு இந்தி மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால், தமிழ் தான் நம் தாய் மொழி. இது தான் நம்ம மூஞ்சிக்கு கரெக்ட்டா இருக்கும் என கூறி சிரித்தார். இதை கேட்டு அரங்கமே சிரிப்பின் ஓசையால் அதிர்ந்தது. மேலும் நெட்டிசன்ஸ் சிலர் ” என்னது…? அந்த பொம்பளையா? உங்ககிட்ட இத எதிர்பார்க்கல சார் ” என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.