மனோரமா மரணதில் அவமானப்படுத்தப்பட்ட அஜித்… பிரபலங்களின் துக்க நிகழ்வை வெறுப்பதற்கு காரணம் இதுதான்!

Author: Rajesh
16 February 2024, 4:34 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று தவிர்க்க முடியாக நடிகராக இருந்து வருகிறார். காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல அட்டகாசமான படங்களில் நடித்துள்ளார்.

ajith -updatenews360

படத்திற்கு படம் தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்று அவரை ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பைக் ரேஸ் , கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே வேர்ல்டு டூர் சென்று வரும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் பொதுவாக பிரபலங்களின் மரணத்தில் கூட பங்கேற்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது. அண்மையில் மரணித்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கூட அவர் பங்கேற்க வில்லை.

இதற்கான காரணம் என்னவென்றால் அஜித் மறைந்த பிரபல காமெடி நடிகை மனோரமாவின் மரணத்தின் இறுதி சடங்கிற்கு சென்றபோது மூட்டில் கட்டுபோட்டுக்கொண்டு சென்ற அஜித்தை அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் அவரை சூழ்ந்துகொண்டு மோசமாக இம்சை கொடுத்துள்ளனர். அன்றிலிருந்து எந்த ஒரு இறுதி சடங்கிற்கு போக கூடாது என அஜித் முடிவெடுத்துவிட்டாராம். இருந்தாலும் இதெல்லாம் ஒரு விஷயமா? உங்களது படத்தை பார்க்க மட்டும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆனால், அவர் சந்தித்து அன்பை வெளிப்படுத்தினால் பிடிக்காதாம் என நெட்டிசன்ஸ் அஜித்தை விமர்சித்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 350

    0

    0