அசின் சினிமா வாழ்க்கைக்கு முடிவுகட்டிய அரசியல்… தமிழ் சினிமா பக்கமே வரவிடாத பகை!
Author: Rajesh20 December 2023, 9:42 am
கேரளத்து பைங்கிளியான நடிகை அசின் நல்ல உயரம், அழகான தோற்றம் , ஸ்லிம் பிட் லுக் என அறிமுகம் ஆனதில் இருந்தே இருந்தே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் அழகால் வசீயம் செய்தவர். ஆரம்பத்தில் பரதநாட்டியக் கலைஞராக இருந்த அசின் 2001 ஆம் ஆண்டில் வெளியான ” நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.
அறிமுகமான முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்ததால் அசின் புகழ் பாராட்டப்பட்டு தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வந்தார். பின்னர் தெலுங்கில் 2003-ஆம் ஆண்டில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ” அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி” என்று படத்தில் நடித்தார். அப்படத்திற்காக அசின் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார்.
அது தான் தமிழில் வெளிவந்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படம். தமிழிலும் சூப்பர் ஹிட் அடிக்க கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் பாலிவுட்டிற்கு சென்று இந்த பக்கமே திரும்பி பார்க்கவி ல்லை. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார்.
அழகான குடும்பம் ஒரு மகள் என நிம்மதியாக வாழ்ந்து வரும் அசின் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தும் அவரது மார்க்கெட் சரிந்ததன் காரணம் இந்தி சினிமா தான் என கூறப்படுகிறது. ஆம், பாலிவுட்டிற்கு சென்று ஹவுஸ்புல், ரெடி, போல் பச்சான், கில்லாடி 786, ஆல் இஸ் வெல் என அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து மார்க்கெட்டையே காலி செய்துக்கொண்டார்.
அதுமட்டும் அல்லாமல் சல்மான் கான் உடன் ரெடி படத்தில் கமிட்டாகி நடித்தபோது அப்படத்தின் ஷூட்டிங்கிற்காக அசிங் படக்குழுவினருடன் இலங்கைக்கு சென்றார். அந்த சமயம் இலங்கை போர் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருந்தது. அதனால், இந்தியாவில் இருந்து யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது. அங்கிருந்து யாரும் இங்கு வரக்கூடாது என அரசியல் கட்டமைப்பில் இருந்தனர்.
ஆனால், அசின் அதையும் மீறி இந்தி சினிமா தானே அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்று கிளம்பி போனார். அதன் பின் அசின் நடித்த ஹிந்தி படங்கள் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. இதனால் தமிழுக்கு மீண்டும் வரமுயற்சித்த அசினுக்கு வாய்ப்புகளே தராமல் பீல்டு அவுட் செய்தது தமிழ் சினிமா. இந்த விஷயம் பல வருடங்கள் கழித்து கசிய அசினின் சினிமா வாழ்க்கையில் இவ்வளவு அரசியல் நடந்ததா என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.