சினிமா வாழ்க்கை சீரழிந்ததற்கு காரணம் இது தான்… அங்காடி தெரு ஹீரோ வேதனை!

Author: Shree
21 May 2023, 1:11 pm

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் அங்காடித் தெரு. அஞ்சலி ஹீரோவாக நடித்த இத்திரைப்படத்தில் நடிகர் மகேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இயக்குநர் வெங்கடேசு மற்றும் கனாக்காணும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை சினேகா கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்திற்கு பின்னர் நடிகை அஞ்சலிக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

ஆனால், அப்படத்தில் நடித்த ஹீரோ மகேஷ் படவாய்ப்புகள் இல்லாதால் அடையாளம் தெரியாமல் போய்விட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் மகேஷ், ஈட்டி, சுந்தரபாண்டியனில் விஜய் சேதுபதி கதாபாத்திரம், மாயாண்டி குடும்பத்தார் என பல படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் மிஸ் பண்ணிட்டேன்.

அங்காடித்தெரு வெற்றி படமாக அமைந்த பின்னர் சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளை எடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தர யாரும் இல்லை அதனாலேயே என்னுடைய சினிமா கெரியர் நல்ல துவக்கத்தை கொடுத்தும் வீணாகப் போய்விட்டது என்று வருத்தத்தோடு கூறினார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ