நயன்தாரா குற்றச்சாட்டு:
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிகர் தனுஷ் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளது தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நயன்தாராவுக்கு திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதே போல் நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனின் என் வாழ்க்கையிலும் விளையாடிவிட்டார் அவரது வளர்ச்சியும் அவர் இப்படித்தான் ஆரம்பத்தில் தடுக்க பார்த்தார். ஆனால் அவர் எப்படியோ எதிர்நீச்சல் அடித்து மீண்டு வந்து விட்டார். இதேபோல் பிரச்சனை தற்போது நயன்தாராவுக்கும் தனுஷ் கொடுத்து வருகிறார்.
பிரபலங்களின் வளர்ச்சியை தடுக்கும் தனுஷ்:
இதனால் பிரபலங்களின் வளர்ச்சியை தொடர்ந்து தனுஷ் தடுத்து வருவதாக தனுஷ் மீது பலரும் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பிரச்சினை எங்கு ஆரம்பித்தது என தோண்டி பார்த்தபோது விக்னேஷ் சிவன் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார்.
அப்போது அவருக்கு உதவி செய்ய நினைத்த நடிகர் தனுஷ் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த சிவக நானும் ரவுடிதான் திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஒப்புக்கொண்டு படவேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நயன்தாரா அந்த படத்தின் ஷூட்டிங் போதே விக்னேஷ் இவனை காதலித்துவந்துள்ளார். இது நடிகர் தனுஷுக்கு தெரியவந்ததும் கடுப்பாகியுள்ளார்.
காதலிக்கிறேன்னு சொன்னதும் கடுப்பான தனுஷ்:
பின்னர் நீங்கள் காதலிப்பதற்காக எல்லாம் நான் பணம் போட்டு படத்தை எடுக்க முடியாது என கூறிவிட்டு அந்த படத்தை அப்படியே பாதியில் டிராப் செய்துவிட்டார். இதனால் நயன்தாரா என்ன செய்வதென்று தெரியாமல் கை காசு போட்டு படத்தை வெளியிட்டார். ஆனால் இதை நயன்தாரா குறிப்பிட்டு சொல்லவே இல்லை அதை மறைமுகமாக சொன்னாலும் இதுதான் நிதர்சனமான உண்மை என விவரம் தெரிந்த வட்டாரம் கூறி வருகிறது.