செந்தில் – கவுண்டமணி ஜோடியை யாராலும் உடைக்க முடியல…. அதுக்கு காரணம் இது தான்!

Author: Shree
14 June 2023, 10:34 am

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக செந்தில் உடன் சேர்ந்து இவர் நடித்த காமெடி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடித்து விடுவார்கள்.

அவர்கள் என்ன தான் நட்பாக பழகிவந்த போதும் சில புரிதல் இல்லாததால் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில் நீ இல்லாமலே நான் தனியாக நடித்தே பெரிய ஆள் ஆகுவேன் என கூற கவுண்டமணியும் சரி இனிமே அவனை என் படத்தில் போடாதீங்க தனியாவே நடிக்கிறேன் என சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் அவர்கள் தனித்தனியே நடித்த படங்களுக்கு செந்திலுக்கு மட்டும் அதிகம் வரவேற்பு கிடைத்ததாம் ஆனால், கவுண்டமணியால் தனியாக ஹிட் அடிக்கமுடியவில்லை.

அதுமட்டும் அல்லாமல் ரசிகர்களும் சேர்ந்து நடிப்பதை தான் அதிகம் விரும்பினார்களாம். அதனால் மீண்டும் ஈகோவை விட்டுவிட்டு ஜோடியாக சேர்ந்து படம் நடித்தார்களாம். இந்த இந்த ஜோடி எப்போது நடித்தாலும் ஒன்றாக சேர்ந்தே நடிப்போம். தனிப்பட்ட சண்டையெல்லாம் நடிப்புல வேண்டாம் என முடிவெடுத்தார்களாம் . இதனை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ