சேது அண்ணன் இல்லாமல் படமே எடுக்க முடியல… தொடரும் கூட்டணி குறித்து லோகேஷ் கனகராஜ்!

Author: Shree
5 August 2023, 10:31 am

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், தன் படங்களில் தொடர்ச்சியாக விஜய் சேதுபதி நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துவிட்டதால் அடுத்ததாக இயக்கிய விக்ரம் படத்தில் வேறு யாரையாவது போடலாம் என நினைத்தேன். காரணம் கதை வேறு மாதிரி இருந்தாலும் கேரக்டர் ரிப்பீட் ஆகுறமாதி இருக்கும் அதனால் விஜய் சேதுபதியிடம் ” சேது அண்ணா நீங்க வேண்டாம் நம்ம வேற ஒன்னு பண்ணலாம் என சொல்லிவிட்டேன்.

பின்னர் விக்ரம் படத்தின் சந்தனம் கேரக்டருக்கு ராகவா லாரன்ஸிடம் கேட்டேன் ஆனால், அவர் சில காரணங்களுக்காக முடியாது என கூறிவிட்டார். பின்னர் யார் பொருத்தமாக இருப்பாங்க என யோசித்தேன். கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிக்கிறார் என்றால் அந்த நபரின் பெர்பார்மென்ஸ் கமல் சாரையே தூக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அப்படி பார்த்தல் எனக்கு விஜய் சேதுபதி தவிர வேறு யாரும் அதற்கு பொருத்தமாக இருக்கவே மாட்டாங்க என தோணிடுச்சு. அதனால் மீண்டும் சேது அண்ணனே விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்து வேற லெவல் ஹிட் கொடுத்துவிட்டார் என கூறினார்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…