திரிஷா திருமணம் நின்றுப்போனதற்கு காரணம் இது தான் – பரபரப்பை கிளப்பிய செய்யாறு பாலு!

Author: Shree
17 October 2023, 11:21 am

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்து வந்த ரகசியம் சமூகவலைத்தளங்களில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

முதலில் சிம்வுடன் தான் அவர் நெருக்கமாக பழகி காதலித்து வந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதன் பின்னர் தெலுங்கு ன் நடிகர் ராணாவுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. திரிஷாவுடன் சில ஆண்டுகள் டேட்டிங் செய்துவந்த ராணா அவருடன் நெருக்கமாக பழகிய போட்டோக்களும் இணையத்தில் லீக்கானது.

அதன் பின்னர் திரிஷாவை கழட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திரிஷா – ராணாவின் காதல் முறிவிற்கு காரணம் சமந்தாவின் குடும்பம் தான் என சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசப்பட்டு வந்ததாம். எப்படி என்றால், ராணாவின் குடும்பம் மிகவும் செல்வாக்கு மிக்க தெலுங்கு சினிமாவின் பாரம்பரிய திரைத்துறையை சேர்ந்த குடும்பம். ராணா குடும்பம் நகராஜூனாவின் குடும்பம் எல்லாருமே உறவினர்கள் தானாம்.

இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் உறவுக்கார பெண்ணை தான் திருமணம் செய்யவேண்டும் என கொள்கை கொண்டிருப்பார்களாம். அதனால் தான் திரிஷா காதலை ராணாவின் குடும்பத்தினர் ஆரம்பத்திலே முறித்துவிட்டனர். ராணா குடும்பத்தினர் சதியால் தான் தெலுங்கில் திரிஷாவின் மார்க்கெட் காலியானது.

மேலும், திரிஷாவுக்கு வருண் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நின்று போனது. இது குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, திரிஷாவுக்கு மிக பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த 4 நாட்களில் அவரது அம்மா திருமணம் நின்றுப்போனதாக பேட்டி கொடுத்து அதிரவைத்தார்.

இதற்கான காரணம் என்னவென்று கேட்டதற்கு, எங்கள் குடும்பத்திற்கும் வருண் குடும்பத்திற்கும் செட்டாகாது என்று நாங்கள் கணித்திருக்கிறோம். இந்த திருமணம் நடந்தால் அது சரியாக இருக்காது. திருமணம் செய்துவிட்டு விவாகரத்து செய்வதை விட திருமணத்தை நிறுத்துவது நல்லது என நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என திரிஷாவின் அம்மா பேட்டி கொடுத்ததாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 547

    0

    0