தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம்.
அஜித் முன்பெல்லாம் மற்ற நடிகர்களை போன்றே நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வந்தவர் தான் இடையில் என்ன ஆயிற்று என நீங்கள் கேட்கலாம்… அதற்கான பதில் இதோ, 2010 ஆம் ஆண்டு தலைவனுக்கு பாராட்டு விழா என்ற தலைப்பில் அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்த டாகடர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகளுக்காக இந்த விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பல அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கலந்துக்கொண்டு கலைஞரின் சாதனைகளை பற்றி புகழ்ந்து பேசினார்கள். அப்போது பேசிய அஜித் கலைஞர் குறித்து பல்வேறு விஷயங்களை குறித்தும் பேசினார். பின்னர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு திரைத்துறையினரை கட்டாயப்படுத்தாதீர்கள். எங்களை மிரட்டி இங்கு வரவைத்தார்கள். சமூக விஷயங்களோ அரசியல் விழாக்களுக்கோ தயவு செய்து எங்களை கட்டாயப்படுத்தாதீர்கள். எங்களுக்கு சினிமா போதும் அரசியல் வேண்டாம் என கூறியிருந்தார்.
அஜித்தின் இந்த பேச்சுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டினார். இந்த சர்ச்சையான பேச்சால் அஜித்தை பலர் மிரட்டியதாக அன்றைய செய்திகள் வெளியானது. அதுமட்டும் அல்லாமல் அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு செல்லும்போது சில தொண்டர்ட்ஜ்கள் அஜித்தை பின்தொடர்ந்து தாக்கியதாகவும் செய்திகள் வெளியானது. விஷயத்தை அறிந்து அன்று இரவே அஜித்தின் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் அவரை அழைத்துக்கொண்டு கருணாநிதியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசி இத்தோடு விட்டுவிடுங்க. இது நல்லதில்லை என கூறி அஜித்துக்காக பரிந்து பேசினாராம். அதன் பின்னர் தான் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு பங்கேறக்கப்போவதில்லை என தீர்க்கமான முடிவெடுத்தாராம்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.