யாரும் செய்யாத அந்த ஒரு விஷயம்… லோகேஷ் படம் ஹிட் அடிக்க காரணமே இதுதான்!

Author: Shree
14 June 2023, 5:27 pm

தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்களை மட்டும் இயக்கி ஹிட் இயக்குனராக புகழ் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி , மாஸ்டர் , விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கினார்.

இந்நிலையில் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் திரிஷா , கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு இயக்குனரும் பெரிதாக கடைபிடிக்காத விஷயம் ஒன்றை தன்னுடைய அத்தனை படத்திலும் பின்பற்றி வருகிறாராம். அது என்னெவன்றால், படத்தை பற்றி ஒரு சின்ன துரும்பு கூட கசியவிடவே மாட்டாராம். நடிகர்கள் , டெக்னீஷன்ஸ் படத்திற்கு ஒப்பந்தம் செய்யும்போதே அவர்களிடம் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது. போட்டோ, வீடியோ என எதுவும் வெளியே வரக்கூடாது என கறாராக கூறுவாராம். இதனால் தான் ரசிகர்கள் சஸ்பென்ஸ் உடன் படத்தை பார்த்து மிரண்டு போவார்கள். அது தான் அவரது வெற்றி படங்களின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறதாம்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!