திரிஷா கழுத்தில் தாலி கட்டினால் அன்னைக்கு Night’ஏ காலி – ஜோதிட ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்!
Author: Shree8 May 2023, 7:40 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
அப்படி இருந்த திரிஷா மார்க்கெட் இழக்க அந்த திருமணமே காரணமாக அமைந்தது. தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தியது தான் காரணம். அந்த நிச்சயம் சில பெரியவர்களின் தலையீட்டால் தான் நின்றது என பேட்டி ஒன்றில் திரிஷாவின் அம்மா கூறினார். மேலும், திருமணத்திற்கு சினிமாவில் நடிக்க கூடாது என பிறகு மாப்பிளை வீட்டை சேர்ந்தவர்கள் எச்சரித்து பிளாக்மெயில் செய்ததாக மறைமுகமாக பேட்டி ஒன்றில் கூறினார். அதன்பின் சினிமாவிலும் திருமணத்திலும் தோல்வியை கண்டதால் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், தற்போது இதுவரை வெளிவராத ரகசிய உண்மை ஒன்று கசிந்துள்ளது. அதாவது, திரிஷா திருமணம் செய்துக்கொண்டால் அவரது கழுத்தில் தாலி ஏறிய உடனே அவரது சினிமா மார்க்கெட் அடியோடு சரிந்துவிடும் என ஜோசியர் கூறியதாகவும் திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கமே தலை காட்ட முடியாது என கூறியிருக்கிறார். அதை அப்படியே நம்பிய திரிஷா மற்றும் அவரது அம்மா அயோ சாமி…. கல்யாணமே வேணாம்டா யாப்பா என நிச்சயம் ஆன திருமணத்தை தடாலடியாக நிறுத்திவிட்டார்களாம். இதனை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டியில் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.