இந்திய சினிமாவின் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே இந்தி , தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவராக இருந்து வருகிறார். மாடல் அழகியான இவர் நடனம் மற்றும் பேஷன் ஷோக்களில் பங்கேற்று தன்னை மெருகேற்றிக்கொண்டார். அதன் பின்னர் 2009ம் ஆண்டில் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அதன் பின்னர் 2010 ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா இரண்டாவது ரன்னர் அப் ஆனார்.
அதன் பின்னர் திரைப்படங்களில் ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா என எதிர்பார்த்திருந்த அவருக்கு தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து முதன் முதலாக திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆனால் முதல் திரைப்படமே பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்த அவர் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
அதில் தெலுங்கு திரைப்படங்கள் வெற்றிபெற்றதால் அங்கு மார்க்கெட் பிடித்தார். தொடர்ந்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார். துவ்வாடா ஜகன்னாதம், மகரிஷி , கடலகொண்ட கணேஷ் உள்ளிட்ட படங்கள் வெற்றி படமாக அமைந்தது. தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் மீண்டும் வந்தார். ஆனால் அப்படம் தோல்வியை சந்தித்து தமிழ் சினிமாவுக்கு ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.
இந்நிலையில் சற்றுமுன் பூஜா ஹெக்டே குறித்த ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகரான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ” முக்கிய செய்தி இன்று மதியம் நடிகை பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றினார்கள். முழு விவரங்கள் விரைவில் சொல்கிறேன். அவரது சகோதரரின் மூலம் கிடைத்த தகவலின் படி, அவர் கடந்த 2 வாரங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என கூறியுள்ளார். இவரது இந்த பதிவினால் திரையுலகத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர்.