கட்டிப்பிடிச்சு கலங்கி அழுத பாலா இதைத்தான் சொன்னாரு… மனம் திறந்த மாரி செல்வராஜ்!

Author:
24 August 2024, 4:48 pm

வாழ்க்கையின் வழிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”. இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார்.

கட்டிப்பிடித்து கலங்கிய பாலா:

இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் வெளியில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. திரையரங்கில் இருந்து வெளியில் வரும் எல்லோருமே கனத்த இதயத்தோடு வந்து பேட்டி கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் முன்னதாக இப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் கலங்கி அழுது மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது. தனக்கென தனி பாதை அமைத்து அதில் பயணித்துக் கொண்டு தொடர்ந்து வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கும் பாலாவே இந்த படத்தை பார்த்து கலங்கி அழுது விட்டாரா? அப்படி வாழை படத்தில் என்ன இருக்கிறது? என ரசிகர்களுக்கும் சுவாரசியத்தை தூண்டிவிட்டு படம் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது .

என்னை விட்டிட்டு நான் போறேன்:

இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜுடன் அன்று கட்டி அணைத்து அழுத பாலா உங்களிடம் எண்ணம் சொன்னார் என கேட்டதற்கு…. மாரி செல்வராஜ் கூறியது இதுதான்! “அவர் வெகு நேரம் என்னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். பெருசா எதுவுமே பேசவில்லை.

mari selvaraj - updatenews360

என்னை விட்டுட்டு நான் புறப்படுறேன்…. அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னாரு. அதோடு இன்னும் என்னென்ன விஷயங்களை நீ சொல்ல போற அப்படின்னு ஒரு கேள்வி என்ன பார்த்து கேட்டுட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் கொடுத்த அந்த முத்தம் எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது என மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியோடு மனம் திறந்து பேசி இருக்கிறார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!