இதனால தான் நீங்க தளபதி : நடிகர் விஜய்க்கு நன்றி கூறிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. அவரே போட்ட ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 4:02 pm
Vijay Shahrukh khan - Updatenews360
Quick Share

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள, பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக இந்தப் படம் உருவாகிறது.

இதில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட நட்சத்திரங்களும் பதான் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் காவி நிறத்தில் தீபிகா படுகோன் பிகினி அணிந்திருந்தது வலதுசாரிகளின் எதிர்ப்பைப் பெற்றது. படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதனை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”ஷாருக்கான் சாருக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ட்ரைலர் இங்கே” எனக் குறிப்பிட்டுள்ளார் விஜய். அவருக்கும் ஷாருக்கானுக்கும் இடையேயான நட்பு நாம் அனைவரும் அறிந்ததே. அட்லீயின் பிறந்தநாள் விழாவில் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகின.

சமீபத்தில் ட்விட்டரில் கலந்துரையாடிய ஷாருக்கானிடம், “விஜய் பற்றி கூறுங்கள்” என ரசிகர் ஒருவர் கேட்க, “அவர் மிகவும் இனிமையானவர் மற்றும் அமைதியானவர். எனக்கு அருமையான இரவு உணவையும் கொடுத்தார்” என பதிலளித்திருந்தார் ஷாருக்.

இந்த நிலையில் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்க்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடை ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி நண்பா, இதனால தான நீங்க தளபதி, கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம், லவ் யூ என பதிவிட்டுள்ளார்.

Views: - 386

0

0