குழந்தை ஏன் வைரமுத்து போல் இல்லை…? கோபத்தை தூண்டும் நெட்டிசன்ஸ் – சின்மயியின் தரமான ரிப்ளை!
Author: Shree5 June 2023, 2:10 pm
பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும் அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார்.
சின்மயில் பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கில் பல்வேறு பாடல்கள் பாடியிருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடி அறிமுகமான சின்மயி தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலம் ஆனார்.
இவர் தெலுங்கு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என வாடகை தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இதுவரை தன் குழந்தையின் முகத்தை மீடியாவுக்கு காட்டாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர் இருவர் உங்கள் குழந்தைகளின் முகத்தை காட்டுங்கள் என கேட்டதற்கு, இந்த நேரத்தில் அவர்களின் முகத்தை காட்ட எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வெறுப்பு தான் வருது. என் குழந்தைகளையும் அதற்கு உட்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் வைரமுத்துவின் தம்பிகள் என்னிடம் வைரமும் முத்தும் பிறந்து இருக்கிறார்கள் என்று சொல்வது எனக்கு பழகிவிட்டது. அதற்கு மேலே சென்ற அவர்கள், அவர் உன்னிடம் தவறாக நடந்துக்கொண்டும் ஏன் குழந்தைகள் அவரைப் போல இல்லை? என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு தான் இந்த தமிழ் கலாச்சாரமும் கலாச்சார டூட்ஸ்களும் இருக்கிறீர்கள்’ என்று எடுத்த எடுப்பிற்கெல்லாம் வைரமுத்துவை வம்பிற்கு இழுத்து பேசுகிறார் சின்மயி.