இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டுவிஸ்ட்.. 80 நாட்கள் இருந்த போட்டியாளர் EVICTED!
Author: Udayachandran RadhaKrishnan21 December 2024, 11:33 am
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 80 நாட்களை நெருங்கி விட்டதால் போட்டியாளர்கள் பரபரப்பாக விளையாடி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் புது புது பிரச்சனை கிளம்பியுள்ளது. நேற்று முத்துக்குமரன் விட்டுக் கொடுத்து விளையாடியதை பிக் பாஸ் கண்டித்திருந்தது.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று மற்றும் நாளை இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றுவது வழக்கம்.
இதையும் படியுங்க: ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
ஆனால் இந்த வாரம் ஒரே ஒரு எவிக்ஷன் என தகவல் வெளியாகியுள்ளது. இது இந்த வார பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான்.
ஆனால் வெளியேற போவது யார் என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது. அதாவது ரயான் மற்றும் ரஞ்சித் என பேசப்பட்டு வருகிறது.
இதில் ரயானுக்கு no eviction pass கிடைத்துள்ளதால் அவர் தொடர்வார். சீனியர் போட்டியாளரான ரஞ்சித் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளது.