இந்த வாரம் டபுள் எவிக்ஷன்? பிக் பாஸ் வைக்கப்போகும் ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் உறையப்போகும் ஹவுஸ்மேட்ஸ்..!

Author: Vignesh
28 October 2023, 1:30 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய்யும் எலிமினேட் செய்யப்பட்டார்.

bigg boss 7 tamil-updatenews360

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வரும் நிலையில், ஒரு ஷாக் தகவல் வந்துள்ளது. அதாவது இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறுகின்றனர். குறைந்த வாக்குகளில் கடைசியாக இருப்பது விக்ரம் அதற்கு அடுத்து கடைசியாக அக்ஷயா இருப்பதாக கூறப்படுகிறது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!