Bigg Boss-ல் இந்த வாரம் வெளியேறப்போவது இவருதான்: அப்போ அவங்க எஸ்கேப்பா..?
Author: Vignesh22 December 2023, 2:30 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்று வருகிறது.
இதில் எல்லா போட்டியாளர்களின் உறவினர்களும் வந்தனர். ஒரு பிரச்சினையும் இல்லாமல் போனது. ஆனால். ரவீனாவின் சித்தி மற்றும் சகோதரர் வீட்டுக்குள் வர சில codeword பயன்படுத்தியதால், பிக்பாஸ் அவர்களை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இந்த விஷயம், பிக் பாஸில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தநிலையில், இந்த வாரம் எலிமினேஷன் யாரென்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ரவீனா, விக்ரம், விசித்திரா ஆகிய மூன்று பேர் மட்டும் தான் நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இதில், விசித்ரா நிச்சயம் வெளியேற வாய்ப்பு இல்லை. ரவீனா மற்றும் விக்ரம் தான் இவர்களின் வெளியேற இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ரவீனாவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தினர். எனவே, ரவீனா இருந்தால் கண்டிப்பாக கன்டென்ட் கிடைக்கும். ஆகவே, இந்த வாரம் விக்ரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.