நடிகர் விஜய்க்கு மிரட்டல்? மனைவி சங்கீதா, கீர்த்தி சுரேஷ் விவகாரம் : பயில்வான் பகிரங்க குற்றச்சாட்டு!!!

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்வதாகவும், நடிகை கீர்த்தி சுரேசை இணைத்து வைத்து பேசும் விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பரபரப்பாக பேசியுள்ளார்.

துணை நடிகரும், பிரபல சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், தற்போது கிசுகிசுக்கப்படும் விஜய் விவகாரம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

அதில், விஜய் தன் மனைவிடிய பிரிந்து வாழ்கிறார் என பேசுபவர்கள், மனசாட்சி இல்லாமல் பேசுறீங்க. ஏன், என்றால் அது தப்பு. இப்படி பேசுபவர்களால், எழுதுபவர்களால் என்னைப் போன்ற மீடியாக்காரர்களுக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் திருடிவிட்டார் என்று கூறி, ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கம் சண்டையை மீடியா மூட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஏதோ ஒரு இடத்தில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என எழுதிவிட்டால், அதை விஜய் மீது குற்றம் சொல்வதா? விஜய்யா சூப்பர் ஸ்டார்னு எழுதச் சொன்னாரு? விஜய் ரஜினி இடையே நல்ல உறவு உள்ளது, இதை கெடுக்க ஏன் பத்திரிகையாளர்கள் இப்படி பண்றாங்கனு தெரியல.

விஜய் குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார் என்பதெல்லாம் பொய். சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூட, எனக்கு நானே தான் போட்டி என கூறினாரே தவிர வேறு யார் பெயரையும் அவர் கூறவில்லை.

இனிமேலாவது விஜய் மட்டுமல்ல, வேறு எந்த நடிகர், நடிகை மீதும் அவதூறு பரப்பாதீர்கள். உடனே, ‘நீ மட்டும் பேசலாமா?’ என்று நீங்கள் கேட்கலாம். நான் ஆதாரத்துடன் பேசுகிறேன். நடிகைகள் சொன்னதை தான் பேசிட்டு இருக்கேன். எல்லா ஆதாரமும் நான் வைத்திருக்கிறேன். நான் அவதூறு, பொய் சொல்வதில்லை.

லண்டனில் நடிகர் விஜய் அவரது மனைவியோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடியது உறுதியாகியிருக்கிறது. எதற்காக விஜய்யை வம்பிழுக்கிறார்கள் என்றால், விஜய் படம் இப்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது.

விஜய் மீது சிலருக்கு பொறாமை உள்ளது. காரணம், அஜித்திற்கு போட்டியாக விஜய் படத்தை வெளியிடுகிறார் எனபதால் தான். அவர்களுக்குள் பிரச்னை இல்லை. சில இடைத்தரர்கள் இருக்கிறார்கள். இருவரையும் மோதவிட்டு, அதை ரசிக்கிறார்கள்.

முதலில் பத்திரிகையாளர்களுடன் விஜய் நெருக்கமாக இருந்தார். ஆனால் சிலர் அவரை காயப்படுத்தியதால்தான் அவர் மீடியாவை தவிர்த்து வருகிறார். அந்த வெறுப்பில்தான் விஜய்க்கு எதிராக இந்த மிரட்டல் நடக்கிறது.

இதில் விஜய் மனைவி சங்கீதாவை வேறு வம்புக்கு இழுத்து, தேவையில்லாமல் கீர்த்தி சுரேஷை இணைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம் கீர்த்தி சுரேஷ், இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை, ஒரு தொழிலதிபரை மணக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. அந்த பெண்ணின் வாழ்க்கையை ஏன் கெடுக்கறீங்க என பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

5 seconds ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

31 minutes ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

59 minutes ago

இளைஞருக்கு இப்படி ஒரு சாவா? தூங்க சென்றவருக்கு 10 கடி… நடுங்க வைத்த ஷாக் சம்பவம்!

இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…

1 hour ago

போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…

2 hours ago

CM குடும்பத்திற்கு சிறந்த கொத்தடிமை யார்? கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம் : அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…

2 hours ago