மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் வைல்டு கார்டு எண்ட்ரி.. ஆனா, சம்பவம் இந்த தடவை வேற மாதிரி..!

Author: Vignesh
20 November 2023, 10:45 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு 5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக ஆக வந்தனர். இது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருந்தாலும், வீட்டிற்கு போட்டி போட்டு வரும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அதுவும், ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி என்பதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிக் பாஸ் ஒரு விஷயத்தை கூறியுள்ளார். இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வர உள்ளனர். ஏற்கனவே, வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு மூன்று கடுமையான போட்டியை வைக்கப் போகிறோம் இதில் வெற்றி பெற்றால் மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வரமாட்டார்கள் என்று பிக்பாஸ் தெரிவித்துள்ளார். இந்த கடுமையான போட்டியில் தோற்று விட்டால் புதிதாக மூன்று வைல்டு கார்டு என்ட்ரியாளர்கள் வருவார்கள் என்று அறிவித்துள்ளார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!