மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!

Author: Vignesh
8 May 2024, 12:06 pm

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார். திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.

மேலும் படிக்க: அப்படி நடந்தா உனக்கு சங்கு தான்.. ஆல்யா மானசா வெளியிட்ட Video.. விளாசும் நெட்டிசன்கள்..!

தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது. எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். கிட்டதட்ட 37 ஆண்டுகளுக்கு பின் மணி ரத்னம் – கமல் ஹாசன் கூட்டணி இணைந்துள்ளது.

Thug Life

மேலும் படிக்க: CWC 5 போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. வாயை பிளக்க வைத்த பிரியங்கா..!

இந்நிலையில், இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. முதலில் இப்படத்தில் ஜெயம் ரவி துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டான நிலையில், தற்போது அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டார்கள் என கூறப்படுகிறது. இதில், துல்கர் சல்மான் நடிக்க இருந்தநிலையில், அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க வந்துள்ளார். இந்த நிலையில், “தக்லைஃப்” படத்தில் சிம்பு இணைந்துள்ளதற்கு மாஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?