வா முடிஞ்சா மோதி பாரு..CSK-வை வாழ்த்திய கமலின் ‘தக் லைஃப்’ படக்குழு.!

Author: Selvan
23 March 2025, 4:06 pm

சிஎஸ்கே-க்கு ஆதரவு

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படக்குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.’ONE RULE NO LIMITS FOR THE LIONS’ என்ற வாசகத்துடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க,இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.மேலும், முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: படப்பிடிப்பில் ‘நயன்தாரா’ அட்டூழியம்..கடுப்பான சுந்தர்.சி..மூக்குத்தி அம்மன் 2-ல் சிக்கல்.!

இந்நிலையில்,ஐபிஎல் 2024 சீசனில் இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த முக்கியமான போட்டிக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதரித்து ‘தக் லைஃப்’ படக்குழுவின் வீடியோ வெளியானது.இந்த வீடியோ மற்றும் வாசகம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?